மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்கும் இனி பொற்காலம் தான்
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் நிலையில், இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றது.
ராதியைத் தவிர கிரகங்களில் அவ்வப்போது நட்சத்திரங்கள், உதய, அஸ்தமான நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளில் ஏற்படும் நிலையில், சில ராசிகளுக்கு சுப விளைவுகளை ஏற்படுத்தும்.
சுக்கிரன் கிரகமானது பணவரவு, ஐஸ்வர்யம், அன்பு, புத்திக்கூர்மை, பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக இருக்கின்றது.
ஏப்ரல் 25ம் தேதி அதிகாலை மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். சுக்கிரன் 25 நாட்களுக்கு பின்பு தனது ராசியை மாற்றுகின்றார்.
ஏற்கனவே மேஷ ராசியில் சூரியனும் குருபகவானும் உள்ள நிலையில், சுக்கிரனும் மேஷத்தில் நுழைவதால் 5 அதிர்ஷ்ட ராசியினரை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
சுக்கிரன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை பெறுவதுடன், மேஷ ராசியினரின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது. பண வரவு அதிகரிப்பதுடன் போட்டித் தேர்வுகளில் வெற்றியும் கிடைக்கும்.
மிதுனம்
சுக்கிர பெயர்ச்சியால் மேஷ ராசியினர் செல்வச் செழிப்புடன் இருப்பதுடன், வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதுடன், வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
சுக்கிரன் பெயர்ச்சியால் சிம்ம ராசியினரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், அலுவலக பணியில் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதுடன், பண வரவும் அதிகமாகும். வியாபாரம், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்
சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாவதுடன், பொருளாதார நிலையும் மேம்படும். வருமானம் அதிகரிப்பதுடன், செய்யும் அனைத்து பணியிலும் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
சுக்கிரன் பெயர்ச்சியால் மகர ராசியினருக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதுடன், புதிய வேலையை இந்த நேரத்தில் தொடங்கலாம். பொருளாதார சிக்கல்களில் நிவாரணம் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |