9 நாட்களில் அடியோடு மாறப்போகும் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை! யார் யாருக்கு பணம் தேடி ஓடி வரும்
ஆகஸ்ட் 31 முதல் சிம்ம ராசியில் சூரியனுடன் கூட்டணி அமைத்து பயணிக்கும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சூரியனுடன் சுக்கிரன் கூடவே இணைந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது.
ரிஷபம்
பெண்கள் தங்க நகை வாங்கலாம். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். சுகமான நாட்களாக அமையப்போகிறது.
மிதுனம்
உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். ராசிநாதன் சூரியன் உடன் சுக்கிரன் கூடவே பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்கலாம்.
கன்னி
வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். விரைய ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரனால் பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் பராமரிப்பு செலவுகள் வரும்.
துலாம்
மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் நினைவுகள் உற்சாகத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்
நல்ல நேரம் வந்து விட்டது. உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
தனுசு
வேலையில் மாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவியின் அன்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் உற்சாகமாக இருக்கும் காலம் இது. குதூகலமாக அனுபவிக்க தயாராகுங்கள்.
மகரம்
எட்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். பணம், பொருட்களை கவனமாக வைத்திருங்கள்.
கும்பம்
திருமண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும் சந்தோஷமாக அனுபவிக்க தயாராகுங்கள். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது சந்தோஷமாக அனுபவியுங்கள்.
மீனம்
உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்படலாம். காதலிப்பவர்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. விட்டுக்கொடுத்து சென்றால் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.