சிம்ம ராசியில் பிரவேசிக்கும் சூரியன் - எதிர்பாராத ராஜயோக அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரிய பகவானுக்கு முக்கிய இடமுண்டு. வாழ்க்கையில் வலிமையையும் ஆற்றலையும் கொண்டு வரும் கிரகம் சூரியன்.
அந்த வகையில் ஆகஸ்ட் 17-ம் தேதி, சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளார்.
அதனுடைய தாக்கம்12 ராசிகளின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. இதனால் சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்துள்ளதால், சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது.
கடகம்
கடக ராசியினர்களுக்கு சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
இந்த நேரத்தில், எதிர்பாராத பண வரவை பெறுவார்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
நீங்கள் கடந்து வந்த பாதை உங்களுக்கு புதிய வருமான ஆதாரமாக மாறும். கடக ராசிக்காரர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். நல்லவர்களுடனான உறவுகள் மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பிற்கான பலனைப்பெறுவார்கள். அவர்களின் பணி சிறப்பாக இருக்கும்.
பண ஆதாயங்களின் அடிப்படையில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். மேலும், காதலனுக்கும் காதலிக்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பு வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில சுப காரியங்களில் ஈடுபடலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினர்களுக்கு சூரியனின் சஞ்சாரப் பலன்களால் பெரும் லாபத்தை பெறுவார்கள். அவர்கள் தங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம்.
புதிய வேலை மற்றும் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண உறவுகள் இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
