இருமி இருமி குரலே மாறிப்போச்சா? 5 நொடியில் இருமலுக்கு மருந்து..சுக்கு மல்லி காபியை இப்படி போட்டு குடிங்க!
தொண்டை கரகரப்பால் அவதி படுபவர்களுக்கு சுக்கு மல்லி காபி இதமாக இருக்கும்.
இந்த காபி பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி இந்த காபியை அருந்தலாம்.

தேவையான பொருட்கள்
- மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்
- மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு
- துளசி - கைப்பிடி

செய்முறை
துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.
இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம்.

விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.