ஒவ்வொரு மாதமும் ரூ.1000 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்!
பெண் குழந்தை பிறந்ததும் அம்மாக்களுக்கு இருக்கும் கவலை எதிர்காலத்தை பற்றியது தான்.
குழந்தைகளின் இளம்
வயதிலேயே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
இதற்காக நீண்ட கால முதலீடு திட்டங்கள் பலவும் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று "சுகன்யா சம்ரிதி யோஜனா" என்கிற செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும்.
இத்திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படுகிறது, அதுமட்டுமின்றி பெண் குழந்தையின் எதிர்காலத்துக்கு இந்த சேமிப்பு திட்டமானது பெரும் பலன் அளிக்கிறது.
எல்லோராலும் பெரிய அளவில் தொகையை சேமிக்கும் வசதி
இருக்காது, முடிந்த அளவு சிறு தொகையை சேமிப்புகளை
செய்வதன் மூலம் ஓரளவிற்கு சேமிக்க இயலும்.
சுகன்யா சம்ரித்தி திட்டமானது பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருவதனால் அப்பிள்ளைகள் வளர்ந்த பின்னர் பெரிய தொகையாக கிடைக்கக்கூடும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வட்டி விகிதமானது மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
செல்வ மகள் திட்டம் யாருக்கானது?
இச்சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கான, முக்கியமான 3 தகுதிகள் உள்ளது.
i. இத்திட்டமானது குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமே.
ii. பெண் குழந்தை 10 வயதை நிரம்பியிருக்கக்கூடாது. குழந்தையானது பிறந்து இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம்.
iii. இத்திட்டத்தில் குறைந்தது ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மட்டுமே சேர இயலும். இரட்டை அல்லது மூன்று குழந்தை ஒரே பிரசவத்தில் பிறந்திருந்தால் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு.
குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக கணக்கில் சேரலாம்.
இத்திட்டம் வழங்கப்படும் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் கணக்கைத் துவங்கலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்:கணக்கை திறப்பது எப்படி?
i. குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக கணக்கில் சேரலாம்.
ii. இத்திட்டம் வழங்கப்படும் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் கணக்கைத் துவங்கலாம்.
iii. SSA 1 என்ற படிவத்தை நிரப்பி பதிவு செய்யவேண்டும்.
iv. குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும்.
v. நிரப்பிய படிவத்துடன், பெற்றோர் மற்றும் பெண் குழந்தையின் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன், அப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
vi. நீங்கள் நிரப்பி சமர்ப்பித்த தகவல்களையும் உங்களது ஆவணம் மற்றும் சான்றுகளை சரி பார்த்த பின்னரே உங்களது கணக்கீடானது தொடங்கப்படும்.
அதன் பின்னர் உங்களுக்கு passbook ம் வழங்கப்படும். ரூ.1000 செலுத்தினால், 15 லட்ச ரூபாய் கிடைக்கக்கூடும், நீங்கள் விரும்பும் தொகை அல்லது குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு காசோலை அல்லது வரைவோலையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும்.
ஓர் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 1.5 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கில் பணம் சரியாக முதலீடு செய்யவில்லை என்றால், ரூ.50 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
முதிர்வு காலம் வரை பணம் செலுத்த முடியவில்லை என்றால் கூட, முதிர்வு அடைந்த பிறகு, அபராதம் செலுத்தி கட்டிய பணத்தை திரும்பப் பெறலாம்.
அதிக பட்ச முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். தோராயமாக ரூ.1000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.5.70 லட்சம் கிடைக்கக்கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |