திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து... அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா சுகன்யா?
நடிகை சுகன்யா திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் விவாகரத்து பெற்றதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார்.
நடிகை சுகன்யா
முன்னனி ஹீரோக்களுடன் 90ஸ் காலக்கட்டத்தில் நடித்த நடிகை சுகன்யா, புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானார்.
இப்படம் 1992ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கிய இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டிலேயே முடிந்துள்ள நிலையில், சில தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.
அதாவது கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காமல், பல கட்டுப்பாடுகளை விதித்ததால், அவரை விவாகரத்து செய்தவர், பின்பு இரண்டாவது திருமணம் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்காமல் வாழ்ந்து வருகின்றார்.
விவாகரத்து குறித்து பேசியது என்ன?
அண்மையில் சுகன்யா பேசுகையில், பெண்கள் எதற்கும் பயந்து ஓட தேவையில்லை... வாழ்க்கையில் இருவரும் கலந்து பேசி விவாகரத்தை செய்யலாம். விவாகரத்து பெறுவதற்கு தயங்கினால் சில கொடுமையான காலங்களை வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால் பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம் என்றும் இதையெல்லாம் கடந்தே பெண்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் சுகன்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், அவர் ஒரு அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் வாழ்க்கை பாதி நாசமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |