கணவருடன் மிக நெருக்கமாக சுஜா வருணி: வைரலாகும் லிப் லாக் புகைப்படம்
பிரபல நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சுஜா வருணி காதலர் தினத்தன்று வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. முதல் சீசனில் இவருடைய மனதைரியத்தை கண்டு வியந்தவர்கள் பலர், அந்தளவுக்கு ஆண் போட்டியாளர்களுக்கு சரிசமமாக விளையாடினார்.
பிக்பாஸ் முடிந்த கையோடு தன்னுடைய நீண்ட நாள் காதலரான சிவாஜி தேவ் என்பவரை மணந்து கொண்டார். இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சுஜா- சிவாஜி தேவ் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.
குழந்தை வளர்ப்பு டிப்ஸ், காஸ்ட்டியூம், அழகு குறிப்பு என பயனுள்ள பதிவுகளை பதிவிடும் சுஜாவிற்கு சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தின நாளில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லிப்லாக் கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.