விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி: தானாக மின்னல் வேகத்தில் நகர்ந்து சென்ற சூட்கேஸ்
அமெரிக்காவில் விமான நிலையம் ஒன்றில் சூட்கேஸ் ஒன்று தானாக நகர்ந்து நீண்ட தூரம் சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ் திருட்டு போகும் சம்பவம் நடைபெறுவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு சூட்கேஸ் ஒன்று தானாக மின்னல் வேகத்தில் நகர்ந்து சென்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏர்போர்ட் ஒன்றில் சூட்கேஸ் ஒன்று தவறுதலாக கீழே விழுந்து விமான பாதையின் ஓடுதளத்தில் எவ்வித துணையும் இல்லாமல் நேர்கோட்டில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்வு விமான நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
குறித்த காட்சியில் நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் அந்த சூட்கேஸிற்கு முன்னே பல வாகனங்கள் வந்து கொண்டிருக்க, அதன் எதிரே ட்ரக் ஒன்று வேகமாக வருகிறது.
இதனை பார்த்த பயணிகள் சூட்கேஸ் நிலைமை என்னாகும் என்று அவதானித்துக் கொண்டிருக்க ட்ரக் எதிலும் சிக்காமல் சூட்கேஸ் தப்பித்த நிலையில், அவதானித்தவர்கள் மகிழ்ச்சியில் சிரித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.