தற்கொலை என்றுமே தீர்வாகாது! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
தற்சமயம் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
கடன் பிரச்சினைகள், தனிமை, வாழ்க்கையில் முன்னேற்றமில்லை என பல காரணங்கள் தற்கொலைக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், எந்தவொரு பிரச்சினைக்குமே தற்கொலை ஒரு தீர்வாகாது.
ஒரு பிரச்சினையிலிருந்து வெளியில் வருவதற்கு தற்கொலை என்றுமே ஒரு தீர்வல்ல. அது கோழைத்தனத்தின் உச்சக்கட்டமாக பார்க்கப்படுகிறது.
நமக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது தனிமையில் வாடிக் கொண்டிருந்தாலோ அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெற வைப்பது சிறந்தது.
தற்கொலை செய்துகொள்வதே மிகப் பெரும் தவறு. இதில் குடும்பத்திலுள்ளவர்களையும் சேர்த்து விஷம் கொடுத்து கொல்வது, அல்லது குடும்பமாய் சேர்ந்து தூக்கிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகமாய் நடந்து வருகின்றது.
தற்கொலைகள் தடுக்க முடியாத ஒன்றல்ல. தற்கொலையினால் அனைத்து பிரச்சினையும் முடிந்துவிடுமென ஒருபோதும் எண்ணி விடக்கூடாது. அது இன்னொரு பிரச்சினையின் தொடக்கமாக இருக்கலாம்.
எனவே, முடியுமானவரை தற்கொலை முயற்சிகளை கைவிட வேண்டும். அவ்வாறு தற்கொலை சம்பந்தமாக மனம் சிந்திக்க ஆரம்பிக்க தொடங்கினால் நெருங்கிய யாருடனாவது மனது விட்டு பேச வேண்டும்.