55 வயதில் தினமும் வந்த மோசமான புகைப்படம்! நடுநடுங்கிய நடிகை சுஹாசினி: பலரும் அறியாத உண்மை
நடிகை சுஹாசினி தனது 55 வயதில் தான் அனுபவித்த 3 மாத டார்ச்சர் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
நடிகை சுஹாசினி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் இதில் நடிகை சுஹாசினியும் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது அவர் தனக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றினைக் குறித்து பேசியுள்ளார்.
ப்ராஜெக்ட் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது, தினமும் காலையில் அவரது போனுக்கு மோசமான புகைப்படம் வருமாம்.
அப்பொழுது அவரது வயது 55 இருக்கும் என்று கூறியதுடன், குறித்த புகைப்படத்தினை அவதானித்த போது கை, கால்கள் நடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனையே தான் மூன்று மாதங்கள் அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.
பின்பு கமிஷ்னரிடம் கூறிய போது, உடனே ஏன் கூறவில்லை என்று கேட்டுள்ளார். வெளியில் கூறுவதற்கு தனக்கே பயமாக இருந்த நிலையில், இதுவே 18 வயது பெண்ணோ, திருமணம் ஆன பெண்ணோ இம்மாதிரியான விடயத்தை வெளியே கூறினால், அவர்களிடம் தான் முதலில் கேள்வி எழுப்புவார்கள்.
இதுமட்டுமில்லாமல் தனது கணவருக்கு மின்கட்டணம் செலுத்தக் கோரி, வந்ததாகவும், தாங்கள் அந்த லிங்கை தொடாமல் இருந்ததால், ஏமாற்று வேலையிலிருந்து தப்பினோம் என்று கூறியுள்ளார்.