கரும்புச்சாறு யாருக்கெல்லாம் விஷமாக மாறும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
கோடை காலத்திற்கு சிறந்த பானமாக இருக்கும் கரும்புச் சாறை யாரெல்லாம் பருகக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
கோடை காலமான தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. பழக்கடைகளில் மக்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர்.
இதில் எருமிச்சை சாறு, புதினா ஜுஸ், கரும்புச் சாறு போன்றவையும் அதிகளவில் மக்களால் பருகப்படுகின்றது.
கரும்புச்சாறில் கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளதுடன், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது.
செரிமானம் மற்றும் எலும்புளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது.
ஆனால் சிலருக்கு இந்த கரும்புச்சாறு மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம். அது யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
கரும்புச்சாறு யாருக்கு விஷமாக மாறும்?
சர்க்கரை நோயாளிகள் கரும்புச் சாறு எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்து பிரச்சினையை ஏற்படுத்துமாம்.
பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்களுக்கும் கரும்புச்சாறு குடிக்கக்கூடாது. ஏனெனில் இது வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
உடல் எடை அதிகமானவர்கள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதிக கலோரி இதில் உள்ளதால் உடல் மேலும் அதிகரிப்பதுடன், உடலில் கொழுப்பையும் அதிகரிக்கிறது.
சளி, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்கவும், ஏனெனில் இது பிரச்சினை இன்னும் தீவிரப்படுத்துவதுடன், தொண்டை வலி மற்றும் தலைவலி பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதிலுள்ள பாலிகோசனால் தூக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |