குழந்தைகளுக்கு ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது? பெற்றோர்களே உஷார்
இன்றைய காலத்தில் குழந்தைகள் அதிகமாக செல்போன் பாவித்து வரும் நிலையில், அவர்கள் கையில் ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செல்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்
இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனிற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் அமர்ந்த இடத்திலேயே அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளவும் செய்கின்றனர்.
இதில் சோம்பேறியாகவும், செல்போனிற்கு அடிமையாகவும் மாறிவிடும் நாம் குழந்தைகள் விடயத்தில் சற்று கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
பாதிக்கப்படும் குழந்தைகள்
சோறு ஊட்டும் போதும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்க வேண்டாம். ஏனெனில் திரையிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும். பெரியவர்களின் மூளையை விட குழந்தைகளின் மூளை இரண்டு மடங்கு கதிர்வீச்சை உறிஞ்சக்கூடிய சக்தி உள்ளதாம்.
செல்போன் திரையிலிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் கண்களை பாதிப்படைய செய்வதுடன், தூக்கமின்மை, அறிவுத்திறன், மூளை செயல்பாடு ஆகியவை பாதிக்கப்படுகின்றது.
செல்போனை அதிக நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதமாவதுடன், மனநல குறைபாடு, குழப்பம், சிந்தனை தடைபடுதல், உடல் பருமன், மோசமான எலும்பு ஆகிய பிரச்சினை ஏற்படும்.
செல்போன் தீங்கு விளைவித்தாலும், இன்று அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. ஆதலால் குழந்தைகளுக்கு குறித்த நேரத்திற்கு மட்டும் செல்போன் கொடுக்கலாம்.
அனைவரும் வீட்டில் இருக்கும் ஞாயிற்று கிழமை செல்போன் கொடுக்க அனுமதிக்காமல் மற்ற நாட்களில் செல்போன், மடிக்கணினி இவற்றினை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கொடுக்கலாம்.
முடிந்தவரை செல்போனை கையில் கொடுக்காமல் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |