தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாமா? இந்த ஆபத்தை அறிந்துகொள்ளுங்க
அன்றாடம் உணவில் எழுத்துக் கொள்ளும் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தயிர்
குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் வைட்டமின் ஏ. ஈ. சி. பி2, பி12 மற்றும் கரேடினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள்.
தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடுவது மூளையில் செயல்பாட்டுக்கு தேவையான குளுக்கோஸை கொடுக்கின்றது.
மேலும் உடம்பை நீரேற்றத்துடன் வைத்திருப்பதுடன், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.
செரிமான மண்டலம் குளிர்ச்சியடைவதுடன், வயிற்றில் உருவாகும் அமிலச்சுரப்பு, நெஞ்செரிச்சல் கட்டுப்படும்.
மதிய உணவு சாப்பிட்டு முடிந்ததும், தயிர் சாப்பிடுவதால் மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் பித்தம் குறைவதுடன், மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் பிரச்சினையும் தீர்கின்றது.
சிறுநீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள், சளி ஆஸ்துமா, சுவாசக்கோளாறால் அவதிப்படுபவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |