சுகர் ஏறாமல் கட்டுக்குள் வைக்கனுமா? அப்போ பாலில் இதை சேர்த்து குடிங்க
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
இந்நிலையில், உங்கள் சக்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழ பாலில் இந்த மசாலாப் பொருட்களை சேர்த்துக் குடித்தால் சுகரை உங்கள் கட்டுக்குள் வைக்கலாம்.
பாலில் மசாலா பொருட்கள்
சில மசாலாப் பொருட்களை பாலில் கலந்து குடித்தால் இரத்தத்தின் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம். அதில் மிக முக்கியமான 3 மசாலாப் பொருட்களை பாலில் சேர்த்துக் குடித்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
அதில் முதன்மையானது நாம் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் மஞ்சள், மஞ்சளில் இருக்கும் குர்குமின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் அதனால் மஞ்சள் தூளை பாலில் கலந்து குடிக்கலாம்.
இரண்டாவது இலவங்கப்பட்டை இதனை உண்ணுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். ஏனெனில் அதில் நிறைய பயோஆக்டிவ் கூறுகள் உள்ளன. அன்னல்ஸ் ஆஃப் ஃபேமிலி மெடிசின் மற்றும் நீரிழிவு நோயின் ஆய்வின்படி, இது டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் நன்மைகளை வழங்குகிறது. அதனால் பாலில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்தால் சில நாட்களில் பலன் தெரியும்.
மூன்றாவதாக வெந்தயம், வெந்தயமானது சக்கரை நோயுள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இது மசாலாவில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது, இதன் காரணமாக சர்க்கரையின் செரிமானம் குறைகிறது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது.
குறிப்பு: இவை அனைத்தும் வீட்டுவைத்தியதின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. இவற்றை பயன்படுத்துவதற்கு முன் மருத்தவரை ஆலோசித்து பிறகு பயன்படுத்துங்கள்.