உங்கள் உணவில் 30 நாளைக்கு சக்கரையே சேர்த்துக்கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
பொதுவாகவே இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடித்தமானதொன்றுதான். ஆனால் ஒரு நாளைக்கு சக்கரை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பார்த்ததுண்டா?
சர்க்கரை என்பது ஜீனி, இனிப்பு பண்டங்கள், பழச்சாறுகள், கார்பனேடட் பானங்கள் வாயிலாக அதிகமாக நம் உடலுக்கு செல்கிறது.
அவ்வாறு உடலுக்கு செல்லும் சக்கரையை ஒரு மாதம் உடலிற்கு செல்லாமல் இருந்தால் என்னனென்ன நடக்கும் என்பது பற்றி தெரியுமா?
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால்
பல்வேறு ஆபத்தான தாக்குதலிலிருந்து உங்கள் இதயம் பாதுகாக்கப்படுகிறது. இன்சுலின் அதிகம் தூண்டபடாத நிலையில் ரத்த அழுத்தம் அதிகமாவது தடுக்கப்படுகிறது.
இதனால் இதய துடிப்பு பல மடங்கு ஆவதும் தடுக்கப்படுகிறது. இதனால் இதயம் பல மடங்கு பலம் பெறுகிறது.
இயம்வயதினர் சாப்பிடும் இனிப்புகள்தான் சருமத்திற்கு முதல் எதிரி. முகப்பரு, எண்ணெய் வடிதல் ஆகியவை இல்லாத சுத்த சருமம் வெளிப்படும். இளம் வயதிலேயே வரும் முதிர்ச்சி தடுக்கப்படும்.
சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் மற்றும் மன தடுமாற்றம் உண்டாகும். ஆனால் சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பவரகளுக்கு உங்கள் மன நிலையில் உள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியடைய வைக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் அதிக சர்க்கரை மூளைக்கு செல்லும் தகவல் பரிமாற்ற சங்கிலியை உடைக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால் ஞாபக மறதி அடிக்கடி உண்டாகும். நீங்கள் சர்க்கரையை குறைக்கும் போது உங்கள் மூளை செல்கள் பலம் பெறும். நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல் புரியும்.
தொடர்ந்து 4, 5 மாதங்கள் சர்க்கரை சாப்பிடாதிருந்தால் உங்கள் எடை 4 கிலோ வரை குறைந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் சர்க்கரை ஒரு நாளைக்கு 200 கலோரி அதிகமாக காரணம். இதனாலே உடல் எடை கூடும்.
ஒரு மாதத்திற்கு சக்கரையை சாப்பிடாமல் இருந்தால் இந்த மாற்றங்கள் உங்கள் உடலில் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.