16 வயதில் காது கேளாமல் அவதி.., 23 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை
பெண் ஒருவர் 16 வயதில் காது கேளாமையால் அவதிப்பட்ட நிலையில் 23 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சோதனையை தகர்த்தி சாதனை
இந்திய தலைநகரான டெல்லியைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். சௌமியா சர்மா (IAS Saumya Sharma). இவர் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே படித்தார்.
பின்பு, தனது 16 வயதில் காது கேட்கும் சக்தியை இழந்து பெரும் அவதிப்பட்டார். இருப்பினும், நம்பிக்கையை இழக்காமல் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
இதையடுத்து, UPSC தேர்வு நெருங்குவதற்கு 4 மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் சௌமியா சர்மா படிப்பதற்கு தயாரானார். அதற்காக, தினமும் ஆறு மணி நேரம் படித்தார்.
பின்னர், UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், மெயின் தேர்வின் போது அதிக காய்ச்சல் ஏற்பட்டது. இருந்த போதிலும் அவர் தேர்ச்சி பெற்றார். இறுதியாக, அவர் இடஒதுக்கீடு பிரிவைத் தேர்ந்தெடுக்காமல் பொதுப் பிரிவைத் தேர்ந்தெடுத்தார்.
முதல் முயற்சியிலேயே 23 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற சௌமியா சர்மா தற்போது IAS அதிகாரியாக உள்ளார்.
தற்போது இவர் நாக்பூர் ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நாக்பூர் ஸ்மார்ட் அண்ட் சஸ்டைனபிள் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NSSCDCL) இல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
இவர், நாக்பூரில் துணை காவல் ஆணையராக பணியாற்றி வரும் IPS அதிகாரி அர்ச்சித் சந்தக்கை திருமணம் செய்து கொண்டார்.
