திடீர் தலைவலி ஏற்பட காரணம் என்ன? அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்
இன்று பெரும்பாலான மக்கள் அனுபவிக்கும் ஒரு பிரச்சினை தான் தலைவலி. ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றது.
சில மணி நேரமோ, சில நாட்களோ காணப்படும் இந்த தலைவலியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முதலில் தலைவலி ஏன் வருகின்றது என்ற அடிப்படை காரணத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு தலைவலி வருவதற்காக காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, முன்கூட்டியே தலைவலி ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தலைவலிக்கான காரணங்கள்
கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு காரணம், வெப்பத்தினால் மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜன் குறைவதால் இந்த தலைவலி ஏற்படுகின்றது. ஆனால் இதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை.
காஃபின் அல்லது ஆன்ட்டி ஹிஸ்டமைன் கலந்துள்ள வலிநிவாரண மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தினால் தலைவலி ஏற்படும். மேலும் இவை மூளையின் கட்டுப்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
சாப்பாடு நேரத்திற்கு சாப்பிடுவதை தவிர்த்தாலும் தலைவலி ஏற்படும். ஏனெனில் மூளையானது குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் இவற்றை முக்கியமாக கொண்டு இயங்குகின்றது. ஆதலால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்தே இவை மூளைக்கு கிடைக்கின்றது. இந்த ஊட்டச்சத்து மூளைக்கு கிடைக்காத போது வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டி தலைவலி ஏற்படுத்துகின்றது.
வீட்டில் இருக்கும் புளித்த மற்றும் பழைய உணவுகளை சாப்பிட்டாலும் தலைவலி ஏற்படும். நீண்ட நாள் அடைத்து வைக்கப்பட்ட வினிகர், சோயா, சாஸ் மற்றும் சீஸ் உணவுகள் ஆகியவற்றில் இருக்கும் அமினோ அமிலங்கள் உடம்பில் ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி விரிவடையக் செய்தால் தலைவலி ஏற்படுகின்றது.
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு போதுமான அளவு மெக்னீசியம் சத்து இல்லை என்றால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
உடம்பில் நீர்சத்து குறைபாடு இருந்தாலும் தலைவலி ஏற்படும். ஏனெனில் தேவையான தண்ணீரை நாம் பருகாமல் இருக்கும் போது ரத்தமானது கெட்டியாகி அதிலிருந்து மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவதால் ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
இதே போன்று உடம்பிற்கு தேவையான ஓய்வு கிடைக்காததன் காரணமாகவும் தலைவலி ஏற்படும். தினசரி வேலையின் காரணமாக ஹார்மோன்களின் அளவு குறைவதால் ரத்தநாளங்கள் சுருங்கி நீர்ச்சத்து குறைகின்றது.
மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு மத்தியில் இந்த தலைவலி பொதுவாக ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.
அதிகமாக கணினியில் நேரத்தினை செலவிடுபவர்களுக்கு தலைவலி ஏற்படலாம். உங்கள் தோள்கள் இறுக்கமாவதுடன், கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல் உள்ளது.
அதிக வேதிப்பொருட்கள் அடங்கிய வாசனை திரவியங்கள் தலைவலியை ஏற்படுத்துகின்றது. வாசனைகள் மூக்கின் வழியாக நேரடியாக மூளைக்கு எடுத்து செல்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.
தூக்கத்தில் பற்களை கடிப்பதால் தலைவலி ஏற்படும். மோசமான பல் சீரமைப்பு, மன அழுத்தம் காரணமாக இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |