திருமணமான ஒன்றரை வருடத்தில் இளம்பெண் தற்கொலை... கணவர் வீட்டில் அரங்கேறிய கொடுமை அம்பலம்
இந்தியாவில் திருமணமான ஒன்றரை ஆண்டில் தனது கைக்குழந்தையை விட்டுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபாநகர் சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (வயது 30). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் மணிப்பாறை பட்டியைச் சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு பெண் கேட்டுள்ள நிலையில், சுஜாவின் குடும்பம் கொடுக்க மறுத்ததால், சுஜாவிற்கும் அவரது கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
தகராறில் மனவேதனையடைந்த சுஜா தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு கொண்டுள்ளார். உடனே சுஜாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து சுஜாவின் தந்தை அமல்தாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சுஜா இறப்பதற்கு முன்பு கண்ணீருடன் பதிவிட்ட காணொளி நெஞ்சை உறையவைத்துள்ளது. மாமனார் மாமியார் மற்றும் கணவர் சித்ரவதை செய்தது தான் தான் தற்கொலை செய்வதற்கு காரணம் என்று கூறியுள்ளதோடு, தனது குழந்தையை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.