இப்படி ஒரு அழகா கிளிநொச்சி; சரித்திரம் படைக்கும் தோற்றம்!
ஈழமணித் திருநாட்டில் தமிழர் பிரதேசங்கள் என்றும் வரலாறும் குன்றாத வழமையும் கொண்டு விளங்குபவை. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் உள்ள வேருவில் பொன்னாவெளி கிராமம் சிறந்த விவசாய கிராமமாக விளங்குகின்றது. போர்காலத்தின் வடுக்கள் ஆங்காங்கே பதிந்திருந்தாலும் அதன் வளமை குன்றவில்லை.
அதுமட்டுமல்லாமல் மன்னர் கால வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் பல சிறப்புகளையும் கொண்டது இக்கிராமம். யாழ்ப்பாண அரசு காலத்தில் பொன்னாவெளி என்பது யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள நாடாகவே கருதப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் வணிக நடவடிக்கைகளுக்காக இந்த பொன்னாவெளி பயன்படுத்தப்பட்டமையே காரணமாகச் சொல்லப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விடயங்களுடன் ஓர் சிறப்பு காணொளி....