ஆர்யாவுக்கு லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் - தீயாய் பரவும் புகைப்படம்
லண்டனில் நடந்த சைக்கிளிங் போட்டியில் நடிகர் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்று 1,540 கிமீ கடந்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையின் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
அடுத்த சவாலுக்குத் தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Successful completed London Edinburgh London 1540 kms cycling event with my team. One of the most challenging Endeavour in my life. Thanks to my Family and friends for their support and belief 😍😍🤗 Ready for the next Challenge 😜 pic.twitter.com/TCkkUNiaO5
— Arya (@arya_offl) August 14, 2022
நடிகர் ஆர்யா நடிப்பதைத் தவிர, சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் தினமும் சைக்கிள் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த நிலையில் லண்டனில் நடந்த சைக்கிளிங் நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்து தனது அடுத்த சாதனை பயனம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.