சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய வங்கி: பலருக்கும் தெரிந்திடாத உண்மை சம்பவம்
சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படத்துடன் கூடிய ரூபாய் நோட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெரும்பாலும் இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படுத்தினை தான் அவதானித்திருப்போம். தற்போது வெளியான சுபாஷ் சந்திர போஸ் புகைப்படத்திற்கு பின்னே இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
ஆம் பிரிட்டிஷ் படைக்கு எதிராக இந்தியா போராட வேண்டும் என்பதற்காக நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் 1942ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதற்கு அதிகளவிலான நிதி தேவைப்பட்டதால், ஜப்பான் உதவியுடன் அன்றைய பர்மா-வின் ரங்கூன் பகுதியில் 1944ம் ஆண்டு நேதாஜியால் ஆசாத் ஹிந்த் வங்கியை உருவாக்கப்பட்டது.
இந்திய விடுதலை விரும்பும் மக்கள் இவ்வங்கியில் அதிகளவிலான நிதியுதவியை செய்துள்ளனர். மேலும் பல நிகழ்வுகளை விரிவாக கீழே உள்ள காணொளியில் காணலாம்.
இந்த ரூபாய் நோட்டுச் சுதந்திரத்திற்கு முன்பு வெளியிட்டு இருந்தாலும், இந்த ரூபாய் நோட்டில் சுதந்திர இந்தியா "swatantra bharat" என்ற வாசகமும், ஜெய்ஹிந்து என்ற வாசகமும் உள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்த ரூபாய் நோட்டில் இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவை இணைந்த பாரதத்தின் வரைபடமும் உள்ளது.
