விஜய்யுடன் ஒரே கலரில் ட்ரெஸ் - த்ரிஷாவின் ஆடைவடிவமைப்பாளர் சொன்ன சீக்ரெட்
சமீபத்தில் விஜய்யும் த்ரிஷாவும் திருமண விழாவில் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

நடிகை த்ரிஷா
2026ஆம் ஆண்டின் தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று விஜய்யும், திரிஷாவும் ஒரே நிற ஆடையில் திருமண விழாவில் பங்கேற்றது தான்.
ஏனென்றால் அந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் தொடர்பிருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விடயம் சமூக வலைத்தள பக்கத்தில் தீயாய் பரவிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றிணைந்து திருமண விழாவில் பங்கேற்றது அனைவர் மனதிலும் சங்கீதாவின் விவாகரத்து மனுவை உண்மையை பதிய செய்தது.
இப்படி இருக்க திரிஷாவின் ஸ்டைலிஷ்ட் கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.

ஸ்டைலிஷ்ட் ஹர்ஷினி
ஸ்டைலிஷ்ட் ஹர்ஷினி பேட்டியில் பேசுகையில், "திரிஷாவை பற்றி இப்போது மட்டுமா நெகட்டிவ்வாக பேசுகிறார்கள். கடந்த 25 வருடங்களாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் இந்த அளவுக்கு இல்லை. அதன் காரணமாக அந்தப் பேச்சுக்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை. இத்தனையையும் அவர் தாங்குவதற்கு காரணம் அனுபவம் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

அவரை பொறுத்தவரைக்கும் பெர்சனல் வாழ்க்கை வேறு; தொழில் வாழ்க்கை வேறு. அப்படி இருப்பதுதான் சரி என்று நினைப்பார். ஒருநாள் ஃபோன் செய்து ஃப்ரெண்டோட ரிசப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
அதற்கு தகுந்தபடி ட்ரெஸ் ரெடி செய்யுங்கள் என கூறினார். நாங்களும் ரொம்பவே அலட்டல் இல்லாத மாதிரி ரொம்பவே பாரம்பரியமான ஒரு புடவையை ரெடி செய்துகொடுத்தோம்.

நம் ஊர் திருமணம் என்றால் அப்படித்தானே போக வேண்டும். அந்த ரிசப்ஷனுக்கு திரிஷா அணிந்து சென்ற நிறத்திலேயே விஜய்யும் அணிந்திருந்தது செம கோ இன்சிடென்ஸ்.
அதேபோல் பதவியேற்பு விழா ரொம்பவே அஃபிஷியலானது. அதன் காரணமாக எந்த பந்தாவும், ஜிகுஜிகுவும் இல்லாமல் சிம்ப்பிளாக ஒரு புடவை ரெடி செய்துகொடுத்தோம். அதுவும் பெரிய வைரலானது" இப்படி பேசி உள்ளார் ஹர்ஷினி. இதனால் தற்போது இணையவாசிகள் குழம்பி உள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |