ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா? கண்கலங்கி ஒபனாக பேசிய கெனிஷா
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கிடையில், பாடகி கெனிஷா தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டுளளார்.

பாடகி கெனிஷா
ஆர்த்தி ரவியிடம் இருந்து ரவி மோகன விவாகரத்து கேட்டு கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் பின்னர் ரவி மோகனுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கெனிஷா கலந்துகொண்டார்.
இது சமூக வலைத்தள பக்கத்தில் தீ போல பரவியது.

இதையடுத்து, ஆர்த்தி ரவி தொடர்பாக அவதூறு கருத்துகள் வெளியிடக்கூடாது என சமீபத்தில் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த சூழலில் கெனிஷா ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது வாழ்க்கையில் சந்தித்த துயரங்களையும் ரவிமோகனுடனான உறவையும் வெளிப்படையாக கூறி உள்ளார்.

காணொளி
"என் பெயர் கெனிஷா. அப்பா அம்மாவை இழந்த நான் 4ம் வகுப்பு படிக்கும் போது எனது உறவினர்களில் உள்ள பெரும்பாலான ஆண்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்.
விவரம் தெரியாத 18 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எனது கணவருடன் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு 10, 15 பெண்கள் உறவில் இருந்தனர்.
கணவர் என்று சொல்லப்பட்ட அந்த நபருடன் சில மாதங்கள் தான் வாழ்ந்தேன். இந்த நபர் எனக்கு செய்த கொடுமையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னை தாக்கியதில் எனது பனிக்குடம் உடைந்து என் குழந்தை வயிற்றில் இறந்துவிட்டது.

அடிவயிற்றில் இருந்து வந்த ரத்தம், என்னால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த வாழ்க்கையில் வெளியே வந்து எனது பெற்றோரை இழந்தேன்.
என்னை மாற்றிக்கொண்டேன். அடுத்த 10 ஆண்டுகளில் எனது சொந்த காலில் நின்றேன்.க்கள் இன்று சொல்வது போல் ரூ. 500 சம்பளத்தில் பாரில் பாடல்கள் பாடி எனது பயணத்தை தொடங்கினேன்.
பாரில் பாடுவதில் என்ன தவறு இருக்கிறது? இன்று பெரிய இசை நிகழ்ச்சிகளில் பெரிய சம்பளத்திற்கு பாடும் நிலைக்கு வந்துள்ளேன். இந்த வளர்ச்சியை அடைவதற்கு நான் சமரசம் செய்துகொண்டேன் என யாரும் என்னை குறைச் சொல்ல முடியாது.
'எனக்கு 5 குழந்தைகள் உள்ளது. முதியோர் இல்லத்தில் எனது பெற்றோரை சேர்த்துள்ளேன்' என சிலர் பேசுகிறார்கள். அவர்களுக்கு அறிவே கிடையாது.

என்னை சந்தித்தபோது மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ரவி மோகன் ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்தார். அவருக்கு ஒரு தெரபிஸ்டாக என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்கினேன்.
அவ்வளவு தான். ரவி மோகன் ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்பது அவர் தான். என்னை ஏன் இதில் இழுக்க வேண்டும்.
வயிற்றிலேயே ஒரு குழந்தையை இழந்த நான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பேனா? நானும் ரவி மோகனும் உங்கள் கண்முன் தான் இருக்கிறோம்.
எங்கும் ஓடிப்போகவில்லை. மக்களின் உண்மையான பிரச்சனைகள் சமூகத்தில் ஏராளம் உள்ளன. அவற்றைப் பற்றி பேசுங்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்" என்று கோபத்துடனும் கவலையுடனும் ஓபனாக பேசி இருந்தார்.