டி20 பைனலில் நடந்த தரமான சம்பவம்.... கோப்பையை தட்டிதூக்கியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆடவர்களுக்கான 7ஆவது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 172/4 ஓட்டங்களை பெற்றிருந்தது.

சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 167/2 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, கோப்பையை தட்டித்தூக்கியது.
2007 முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸி கோப்பை வெல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் முதல்முறையாக டி20 கோப்பையை தட்டித்தூக்கியுள்ளது.
மொத்தம் 11 முறை, ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸி, அதில் 8 முறை கோப்பை வென்று வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.