11 மணி நேரத்தில் 11ம் வகுப்பு மாணவனின் சாதனை... தென்னை ஓலையில் 1330 திருக்குறள்
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் 11மணி 36 நிமிடத்தில் 1300 திருக்குறளை தென்னை ஓலையில் எழுதி சாதனை படைத்துள்ளார்.
தென்னை ஓலையில் திருக்குறள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஷாக்.
இவர் ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி ஷகீலா பானு. இந்த தம்பதிகளின் மூத்த மகன் வஜாகத்(15) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி போட்டியில் கலந்து கொண்டு 2 சாதனைகளை படைத்துள்ளார்.
இதில் முதல் சாதனையாக 6 வகையிலான ரூபிக்ஸ் க்யூப் இணைத்து கொண்டே 160 திருக்குறளை 7 நிமிடம், 41 நொடியில் உச்சரித்துள்ளார்.
மற்றொரு சாதனையாக 1330 திருக்குறளை 11 மணி 36 நிமிடத்தில் 133 தென்னை ஓலையில் பேனா மூலம் தொடர்ந்து எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவன் கூறுகையில், ”நான் 2 சாதனைகளை நிகழ்த்துவதற்கு எனது பெற்றோர் மற்றும் தம்பி, உறவினர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என அனைவரும் ஒத்துழைப்பு தந்ததால் தான் தன்னால் முடிந்தது என்றும் இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது லட்சியம்” எனறு கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |