பள்ளி கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்! கண்பார்வை பறிபோன சோகம்
கழிவறைக்கு சென்ற சிறுமியை நாய் கடித்ததால் தற்போது பார்வை இழப்ப ஏற்பட்டு கஷ்டப்படும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது.
பள்ளிக்கு சென்ற சிறுமி
மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ள நிலையில் இவருடைய மனைவி கூலிவேலை சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே உள்ள அரசு மகளிர் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி 8ம் வகுப்பு படிக்கும் ஆசினி பள்ளியில் கழிவறைக்கு சென்ற நிலையில், அங்கு வெறிநாய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
மாணவியின் உடலில் பல இடங்களில் கடித்த நிலையில், கண் பகுதியிலும் பலமாக கடித்துள்ளது.

கண்பார்வை பரிபோன சோகம்
இதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்ட நிலையில், படுகாயமடைந்த மாணவி போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஆசினிக்கு வெறிநாய் கடித்ததில் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சென்னையில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், எந்தவொரு முன்னேற்றம் இல்லாமல் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் காணொளி இணையத்தில் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.
வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவி - சோகம் !!#schoolgirl | #Dog | #Attack | #Krishnagiri | #vision pic.twitter.com/P2c9EZlEnu
— Gowtham Natarajan (@GowthamNatara21) August 1, 2022