காதுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற மாணவி உயிரிழந்த சோகம்! நடந்தது என்ன?
காது வலிக்கு சிகிச்சைக்கு சனெ்ற 11ம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
காதுவலி சிகிச்சைக்கு சென்ற மாணவி
திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி என்பவரின் மகள் அபிநயா(16). இவர் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்துவந்த நிலையில், இவருக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் திருவொற்றியூரில் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சிகிச்சைக்கு அபிநயாவை அழைத்துச் சென்றுள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அறுவை சிகிச்சை சயெ்ய வேண்டும் என்று கூறியுள்ளதையடுத்து கடந்த 14ம் தேதி காதில் அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்த சில மணிநேரத்தில் அபிநயா நெஞ்சுவலிப்பதாக கூறியதையடுத்து, அவருக்கு எக்கோ சோதனை எடுத்து பார்த்த போது, அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்ததால், மேல் சிகிச்சைக்கு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அபிநயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவறான சிகிச்சை மேற்கொண்டதால் குறித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்பு பொலிசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்பு மருத்துவமனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து கலைந்து சென்றுள்ளனர்.