உயிரற்ற நிலையில் ஸ்ரீமதி! சம்பவ இடத்திலிருந்து 4 பேர் தூக்கி செல்லும் காட்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் கீழே விழுந்த இடத்திலிருந்து அவரை நான்கு பேர் தூக்கி செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி ஸ்ரீமதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கடந்த 13ம் தேதி ஸ்ரீமதி பள்ளிக்கூட மாடியிலிருந்து கீழே குறித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், இதனை மறுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீமதியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.
தற்போது வரை அவரது மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மாணவியின் புதிய காணொளி
இந்நிலையில் மாணவியின் புதிய காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சியில் 13ம் தேதி காலை 5.23 மணிக்கு, மாணவி ஸ்ரீமதி கீழே கிடக்கும் நிலையில் அவரை தூக்குவதற்கு வார்டன் சென்றதும், வார்டன் வருவதற்கு அங்கு இரண்டு ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் நின்று கொண்டுள்ளனர்.
பின்பு 4 பேராக சேர்ந்து ஸ்ரீமதியை தூக்கிக் கொண்டு வரும் காட்சி கலங்க வைத்துள்ளது.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்....