தனது படிப்பிற்காக வேலைக்கு சென்ற மாணவன்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
குடும்ப வறுமை காரணமாக கல்லூரி படித்துக்கொண்டு பகுதி நேர வேலைக்கு சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்கு சென்ற கல்லூரி மாணவர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20). இவர் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்துவந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாகவும், தனது செலவிற்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து பரிமாறும் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றில், சமையல் பணி செய்து கொண்டிருந்த சதீஷ் எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் விழுந்துள்ளார்.
உடல் முழுவதும் வெந்த நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.