காதலனை நம்பி ஹோலி பண்டிகை கொண்டாட சென்ற காதலி! இறுதியில் அரங்கேறிய துயரம்
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் காதலன் ஒருவன் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை கொலை செய்த காதலன்
ஜார்கண்ட் மாநிலத்தின் உர்ஜா நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவர் மற்றும் மாணவி காதலித்து வந்துள்ளனர்.
குறித்த மாணவி இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பேசிவந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது, குறித்த பெண்ணையும் காதலன் அழைத்து சென்றுள்ளார்.
அப்பொழுது மாணவன் தனது காதலியை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நிலையில், மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்பு பொலிசார் வயல் வெளி ஒன்றில் பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த மாணவனை விசாரணை மேற்கொண்ட போது, மாணவி வேறொருவருடன் பேசி வந்ததாகவும் இதனால் கோபமடைந்து தான் கொாலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையை தொடர்ந்து மாணவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 17 வயதே நிரம்பிய மாணவன் தன் உடன் பயின்ற மாணவியை கொலை செய்த சம்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.