மறைந்த நடிகை சித்ராவை துரத்தி துரத்தி காதலித்த மாணவன்!
மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தன்னை ஒரு பையன் காதலித்த கதை குறித்து விகடனில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த கட்டுரையில், ‘’நான் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்ச பொண்ணு. ஏழாவது படிச்சப்போ, பக்கத்து ஸ்கூல் பையன் ஒருத்தனுக்கு என் மேல பயங்கர லவ்.நான் எங்க போனாலும், அங்க வந்து நின்னுடுவான்.
ஆனா, அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. என் கூடப் படிச்ச பிள்ளைங்க, என்னை கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. `இப்படிப் பேசாதீங்க, எனக்கு அவனைப் பிடிக்கலை’ன்னு எத்தனையோ தடவை சொல்லியும் யாருமே விடறதா இல்ல. கடைசியா, என் கையில போட்டிருந்த கண்ணாடி வளையலை எல்லாம் சுவர்ல கையை இடிச்சே உடைச்சேன்.
கை முழுக்கக் கீறல், ரத்தம். அழ ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் என்னை யாரும் கிண்டல் பண்ணல.
கேள்விப்பட்டு அந்தப் பையனும் ஆஃப் ஆகிட்டான். ‘இது முதல் காதலா?’ன்னு கேக்காதீங்க. என்னை முதன்முதலா ஒருத்தன் காதலிச்ச கதைன்னு வெச்சுக்கோங்க.’’