மேடையில் விஜய்யை வெறுப்பேற்றிய மாணவன்! கோபத்தை அடக்கிய காணொளி
நடிகர் விஜய்யை மேடையில் வைத்து விசில் அடிக்கக்கூறி நெருக்கடி கொடுத்த மாணவனால் விஜய் கோபமாகிய காட்சி வைரலாகி வருகின்றது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விஜய்யின் கையால் விருதுகளையும், பரிசுகளையும் வாங்கியுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலரும் நடிகர் விஜய்க்கு தன்னால் முடிந்த பரிசுகளை கொடுத்தனர்.
இந்நிலையில் மேடையில் பேசிய மாணவர் விஜய்யை விசில் அடிக்கக் கோரி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் வெறுப்பாகிய விஜய்யின் முகம் ஒரு நிமிடம் மாறியுள்ளது. ஆனாலும் கோபத்தை அடக்கி ஒருவழியாக சமாளித்துள்ளார்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |