மாற்றுத்திறனாளி மாணவர் கொடுத்த பரிசு! பார்த்ததும் கண்கலங்கிய நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு பரிசு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கிய விஜய், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் உரையாற்றினார்.
கல்வி மட்டுமே முக்கியம், உங்கள் குணத்தை இழந்தால் அனைத்தையும் இழந்தது போன்றாகிவிடும் என்று பேசினார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தன் கைப்பட வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு பரிசளித்தார்.
இதை திறந்தது பார்த்ததும் விஜய் நெகிழ்ச்சியடைந்தார், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Handicapped boy presents his Guft to Thalpathy Vijay ?❤️ He Receives it so Humbly ❤️#Leo pic.twitter.com/SxD8NGddIA
— Leo - The Movie (@sarathvijay967) June 17, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |