ஸ்க்விட் கேம் தொடரை பார்த்தவருக்கு மரண தண்டனை - வடகொரியா அரசின் கொடூர செயல்!
நெட்பிளிக்ஸ் தளத்தில் பல வெப்சீரியஸ்கள் ட்ரெண்டிங்காக உள்ளது. அதிலும் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஸ்க்விட் கேம் என்ற தென்கொரிய படைப்பில் வெளியான சீரியஸ் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
மேலும், யூகிக்கவே முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டால் ‘ட்விட்ஸ்ட் கேம்’ தொடர் என்று சொல்லும் அளவுக்கு பார்வையாளர்களிடம் ஆச்சர்யமூட்டியது. இந்தத் தொடரை தற்போது வரை 13 கோடிக்கும் அதிமானவர்கள் பார்த்துள்ளனர் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுக்க வரவேற்பை பெற்ற இந்த சீரியஸை வடகொரியாவில் பென் டிரைவ் மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்த ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்க்விட் கேம் பார்க்க ஆவலுடன் பென் டிரைவை வாங்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆசிய செய்திகளுக்கான தனியார் ஊடகமான ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் செய்தி வெளியாகியுள்ளது.