உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த மாணவி - வைரலாகும் வீடியோ!
ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த மாணவி
சில மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வார்கள். இன்னும் சில மாணவர்கள் ரயில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்வார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக சில நேரங்களில் இப்படிப்பட்ட பயணங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும்.
ஆனால், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் மாணவி ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்.
அந்த வீடியோவில், மாணவி ஒருவர் பள்ளிக்குச் செல்ல, ஆபத்தான முறையில் ஒரு கயிற்றால் தன் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்து இக்கறையிலிருந்து, அக்கறைக்குச் செல்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து இப்படிப்பட்ட ஆபத்தான முறையில் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். அதிகாரிகளின் இது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
The Legend Children will risk their lives to gets to school in some places of the world. ❤️#MondayMotivation #HappyBirthdaySachin #RCBvsRR #MSDhoni #ITRaid #psvaja #ViratKohli pic.twitter.com/nMtcKvkfs8
— Tulip Siddiq (@SiddiqTulip) April 24, 2023