மஞ்சள், வேம்பில் சானிட்டரி நாப்கின்: பெண்களுக்கு ஓர் இனிப்பான தகவல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மத்தியிலும் சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் சிறுவயதிலேயே நோய்கள் நம்மை அண்டிக்கொள்கின்றன.
குறிப்பாக பெண்களுக்கு கருப்பை தொடர்பான நோய்கள் 30 வயதிலேயே வரத்தொடங்கிவிடுகிறது, இதற்கு மற்றொரு காரணமாக அவர்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களையும் குறிப்பிடுகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர், மஞ்சள், வேம்பு மற்றும் வெட்டி வேர் கொண்டு சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகிறார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள க்ரிஸ்டல் க்ரோத் ஆராய்ச்சித் துறையை சேர்ந்த மாணவி ப்ரீத்தியே இந்த நாப்கினை கண்டுபிடித்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பின்னர், பல தோல்விகள் அடைந்து இதை கண்டுபிடித்துள்ளாராம்.
இந்த நாப்கினில் முதல் மற்றும் கடைசி லேயர், உதிரத்தை வெளியேற்றாதபடி வடிவமைத்ததுடன், நடுவில் உள்ள லேயர் அதிகளவு நீரை உறிஞ்சும்படி வடிவமைத்துள்ளார்.
மேலும் மண்ணில் இதை புதைத்து வைத்தால் ஒரு மாதத்தில் மக்கிவிடும்படியும் தயாரித்ததாக கூறுகிறார் ப்ரீத்தி.
மிக மலிவான பக்கவிளைவுகள் இல்லாத இந்த சானிட்டரி பேட்களை முழுமையாக பரிசோதித்த பின்னர், மக்கள் செயல்பாட்டு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.