அளவுக்கு அதிகமாக கோபம் கொள்கிறீர்களா? Stressball செய்யும் அற்புதம்
மன அழுத்தம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தவும், பதற்றத்தை குறைப்பது, கை தசைகளின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கும், நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்த ஸ்டிரெஸ் பால் என்று அழைக்கப்படும் மென்மையான பந்து உதவுகின்றது.
இதனை கடினமாக அழுத்தி ஒரு 5 விநாடிகள் வைத்திருந்து பின்பு மெதுவாக கைகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். பின்பு ஒரு நிமிடம் இடைவெளி விட்டு மற்றொரு கையிலும் இவ்வாறு செய்யவும்.
ஸ்ட்ரஸ்பாலின் நன்மைகள்
ஸ்டிரெஸ் பாலை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டுவதுடன், மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கையில் இணைந்துள்ளது. இதனால் நீங்கள் பந்தை அழுத்தும் போது தன்னிச்சையாகவே நம்முடைய கவனம் திசை திருப்பப்படுவதுடன், மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ந்து தூண்டப்படுவதால் எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும்.
மகிழச்சியை உணர வைக்கும் இந்த ஹார்மோன் வலி நிவாரணியாகவும் செயல்படும்.
ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும் போது, உள்ளங்கை பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்குவதுடன், சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கின்றது.
இந்த ஸ்டெரஸ்வந்தை மனஅழுத்தம் உடையவர்கள், அடிக்கடி கோபம் கொள்பவர்கள், பதற்றம் அடைபவர்கள், நரம்பு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.
கையில் எலும்பு முறிவு, தசைநார் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |