பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லெண்ணெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் ?
பொதுவாக பெண்கள் தங்களின் உடல் ரோக்கியத்திற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த எண்ணெய் நமது வெளிப்புற சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் துத்தநாகம் நிறைந்துள்ளது.
இந்த துத்தநாகம் நமது சருமத்தை ஈரப்பதத்தை தக்கவைத்து மென்மையாக்க உதவுகிறது. தோல் வயதானதால் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்க நல்லெண்ணெய் பெரிதும் உதவுகிறது.
கோடையில், உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உங்கள் கைகளின் மேல் பகுதியில் சிறிதளவு நல்லெண்ணெயை தடவினால் போதும்.இது வியர்வை மற்றும் பிற பாக்டீரியாக்களால் ஏற்படும் தோல் நோய்களையும் தடுக்கிறது.
நல்லெண்ணெய் கலந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் இதயம் மற்றும் இதயத்துடன் தொடர்புடைய தசைகள், நரம்புகளில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்க உதவும்.
இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. சரியான வேகத்தில் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தம் சீராக செல்லும் போதுதான் நமது மனமும் உடலும் சுறுசுறுப்பாக இயங்கும். இதை தவிர சில நரம்புகளால் உண்டாகும் நோய்களை குணமாக்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |