நொடிப்பொழுதில் பனிக்கட்டியாக மாறும் நீரோடை: நம்பமுடியாத ஆச்சரிய காட்சி
கனடாவில் உள்ள ஸ்குவாமிஷ் (Squamish) பகுதியில் குறைந்த வெப்பநிலை காரணமாக உறைபனி சூழ்ந்துள்ளது. சமீபத்தில் இங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
நிலப்பரப்பை சூழ்ந்து இருக்கும் உறைபனி மீது வெளியேறும் ஓடை நீரானது சிறிது நேரத்தில் கானல் நீர் போல மாயமாகி விடுகிறது. இந்த வீடியோவை பதிவு செய்து பிராட் அட்சிசன்(Brad Atchison) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிடுகையில், "நேற்று காலை ஸ்குவாமிஷ் பகுதியிலுள்ள ஷானான் நீர்வீழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு அறிய நிகழ்வுக்கு இதுதான் உதாரணம்.
இந்த ஓடை உங்கள் கண்முன்னே மறைகிறது" என்று கூறினார். இந்த வீடியோ இதுவரை 8 லட்சம் பார்வையாளர்களை தாண்டி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
சிலர் இதனை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், சிலரோ இதை போலியானது என்று குறிப்பிட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவர் கூறுகையில், "என்னை ட்விட்டரில் பின்தொடர்பவர்களுக்காக இந்த வீடியோவை பதிவிட்டேன், தெளிவாக தெரியும் வகையில் zoom செய்து வீடியோ பதிவிட்டேன். சிலர் இது போலியானது என்று கூறுகிறார்கள், ஆனால் அது இல்லை, நான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன் இது உண்மையான நிகழ்வு" என்று கூறியுள்ளார்.
An example of rarely seen Frazil Ice from Shannon Falls in Squamish, BC yesterday morning. The stream disappears instantly before your eyes. @spann @JimCantore @stormchasernick @SeattleWXGuy pic.twitter.com/QmSbLIKNfC
— Brad Atchison (@Brad604) December 29, 2021