உங்கள் தலைமுடி நேராகவும் பளபளப்பாகவும் இருக்கணுமா? அப்போ இத பண்ணுங்க
நமது முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கேரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், போன்றவற்றை உண்பது அவசியம்.
அத்துடன் குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருள்களை சாப்பிட வேண்டும். காற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியில் அதிகம் பட்டால், முடி வறண்ட நிலைக்கு உள்ளாகும்.
நாளடைவில் தலைமுடியின் அழகே இல்லாமல் கலையிழந்து போகவும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஹேர் பேக் ஒன்றினை செய்யலாம்.
ஹேர் பேக்
1. கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகிய இந்த மூன்று பொருட்களுடன் கொஞ்சமாக தேன் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கி எடுத்து கொள்ளவும்.
இந்த கலவையை முடியில் தடவி கொஞ்ச நேரம் வைத்த பின்பு ஷாம்பு கொண்டு முடியை கழுவவும். இப்படி பண்ணும் போது முடி கருப்பாகவும் அதன் பளபளப்பை இழக்காமலும் இருக்கும்.
2. உங்களுக்கு சேதம் அடைந்த முடி நிறைய காணப்படும். இதற்கு நீங்கள் ஒரு வாழைப்பழம், கொஞ்சம் தேன் மற்றும் தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அரைத்து எடுத்து தலையில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பின்னர் இதை ஷாம்பு கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இது உங்கள் முடியை நேராக வைத்திருக்கும். வாழைப்பழம் மற்றும் தயிருக்கு இந்த குணங்கள் உள்ளது.
3. முடிக்கு pH அளவு உள்ளது. இந்த அளவை மீட்டெடுக்க ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தினால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
இது இயற்கையாகவே முடியை நேராக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இது உங்கள் முடி வளர்ச்சிக்கும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |