Mutton Varuval: தக்காளி, வெங்காயம் இல்லாமல் மட்டன் வறுவல் செய்வது எப்படி?
பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள். மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்கக் கூடியது.
அந்த சமையலுக்கேற்ப அதன் சுவையிலும் மாற்றம் ஏற்படும். இதுவரை யாரும் மட்டனை சமைக்கும் போது வெங்காயம், தக்காளி சேர்க்காமல் சமைத்திருக்கமாட்டார்கள்.
அந்த வகையில் வெங்காயம், தக்காளி இல்லாமல் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் -1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1,1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுவலுக்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 2
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
மட்டன் வறுவல் செய்முறை
முதலில் மட்டனை நன்றாக கழுவிய பின்னர் குக்கரில் விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்னர் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1,1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
தாளிப்பை கிளறி விட்டு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக வேக வைத்த மட்டனை தாளிப்புடன் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் வறுவல் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |