8 வினாடிகளில் உயிரை காவு வாங்கும் புகைத்தல்.. எப்படி -ன்னு தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக அனைத்து வயதினரையும் பாதிக்கும் பல நோய்களுக்கு புகைத்தல் மிக முக்கியமான ஆபத்து காரணியாக காணப்படுகிறது. ஒரு ஆண்டில் 60 லட்சம் பேரை புகையிலை பயன்பாடு கொல்வதாக உலக சுகாதார தாபனத்தின் புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது.
இவற்றில் 50 இலட்சம் பேர் நேரடியான புகையிலை பயன்பாட்டினாலும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பிறர் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்பினாலும் மரணிகின்றனர். ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் புகையிலை பயன்பட்டினால் இறப்பதாக அறியப்பட்டுள்ளது.
தற்போது புகையிலை பயன்படுத்துபவர்களில் பாதி பேர் புகையிலை சம்மந்தமான நோய்களினாலேயே முடிவில் இறப்பது நிச்சயம் எனவும் உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
மேலும் புகையிலையில் 4000 இற்கும் மேல் நச்சு பொருட்கள் அடங்கியிருப்பினும் மிகவும் ஆபத்தான நச்சு பொருட்களாக நிக்கோட்டின், கார்பன் மோனொக்சைட்டு, தார் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது.
வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கம் புகையிலையின் விளைவுகளுக்கு மிக முக்கிய காரணம் அதில் அடங்கியுள்ள நிக்கோட்டினே ஆகும்.நச்சு பொருளான இந்த இரசாயணம் அதை உபயோகிப்பவர்களை அந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |