மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து நிரந்தர தீர்வு வேண்டுமா? இதை மட்டும் சாப்பிட்டால் போதும்
இன்றைய காலத்தில் மக்கள் பல உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மலச்சிக்கல் பிரச்சினையும் அதிகமாகவே இருக்கின்றது.
செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். அதிகப்படியான மற்றும் மோசமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மலச்சிக்கலை தவிர்க்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சக்கரைவள்ளிக் கிழங்கு
நார்ச்சத்து அதிகமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் செரிமான பிரச்சினை தவிர்க்கப்படுவதுடன் மலச்சிக்கலும் ஏற்படாமல் இருக்கின்றது. அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகமான நார்சத்துக்கள் காணப்படுகின்றது. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டல் பிரச்சினையை தவிர்க்கலாம்.
புரோபயாடிக்குகள்
புரோபயாடிக்குகளின் வகையைச் சேர்ந்த உணவுகள் மலச்சிக்கலை விரட்டுவதில் முக்கியமாக காணப்படுகின்றது. தயிர், சில பால் பொருட்கள் மற்றும் பிளாக் பக்வீட் போன்றவை புரோபயாடிக்குகள் நிறைந்து உணவுகளாக உள்ளன.
ஆலிவ் மற்றும் ஆளிவிதை எண்ணெய்
செரிமானத்தை மேம்படுத்து மலச்சிக்கலை நீக்குவதில் ஆலிவ் எண்ணெய் முக்கியமாக பயன்படுகின்றது. இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், முற்றிலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம். அதாவது பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அத்திப்பழம் மற்றும் திராட்சை
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை அளிக்கும் அத்திப்பழம் மற்றும் திராட்சை பழங்களை இரவில் முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் மலச்சிக்கள் பிரச்சினை முற்றிலும் குணமடையும்.