சாதாரண வலிக்கும், வயிற்று புற்றுநோயிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வயிறு புற்றுநோய் உலகளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தையும், இறப்பு வீதத்தில் மூன்றாவது முக்கிய காரணமாகவும் விளங்குகின்றது.
மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுவதற்கு பல அறிகுறிகள் உள்ளன.
அந்த வகையில், வயிற்று பகுதியில் வீக்கம் தவிர, பொதுவானதான வலி சாதாரண அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
வயிற்று பகுதியில் வலி் ஏற்படும் போது அது சாதாரண வயிறு வலியா? அல்லது வயிற்று புற்றுநோயிற்கான அறிகுறியா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வயிற்று புற்றுநோய் அறிகுறிகள்
1. உடல் பருமன் திடீரென குறையும்.
2. ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவும் புற்றுநோய் அல்லாத வயிற்றுப் புண்களை ஏற்படுகிறது.
3. நெஞ்செரிச்சல், வீக்கம், மேல் வயிற்று வலி, குமட்டல், ஏப்பம் மற்றும் பசியின்மை ஏற்படும்.
4. வெளிறிய சருமம் மற்றும் மஞ்சள் காமாலை, இரத்த வாந்தி ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
5. சிலருக்கு மலம் கருப்பாகவும் சிரமமாகும் வெளியேறும் இது தொடருமாயின் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக பார்க்கலாம்.
வேறுபாடுகள்
1. அஜீரணம் போன்ற தற்காலிக தூண்டுதல்கள் அதிகமாகும் பொழுது வயிற்று வலி அடிக்கடி எழும். இந்த பிரச்சினை புற்றுநோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
2. விவரிக்க முடியாத எடை இழப்பு, தொடர்ச்சியான குமட்டல் அல்லது வாந்தி (குறிப்பாக இரத்தம் இருந்தால்), பசியின்மை, விழுங்குவதில் சிரமம் அத்துடன் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளையும் கூறலாம்.
முக்கிய குறிப்பு
மேற்குறி்ப்பிட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |