பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டிருப்பது எதற்காக? கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய விடயம்
நாம் கடைகளில் வாங்கும் பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருவது உண்டு. இதற்கான காரணம் பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
பழங்களில் ஸ்டிக்கர் எதற்காக?
பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது அதன் தரத்தினை நிர்ணயம் செய்வதற்காகவே... இந்த பழக்கம் வெளிநாடுகளில் இருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அவை காணப்படுகின்றது.
ஆனால் இங்கு தரமற்ற பழங்கள்.. அதாவது அடிபட்ட பழங்களை மறைப்பதற்காக ஸ்டிக்கர் ஒட்டி விற்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது.
இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டுவதால் பழங்களின் தரத்தினை எவ்வாறு நாம் கண்டறிய வேண்டும் என்றால் அதன் நம்பரை வைத்தே...
நீங்கள் வாங்கும் பழங்களில் 3 அல்லது 4 என்ற எண்களில் ஆரம்பிக்கும் எண்கள் இருந்தால் அவை, பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயண மருந்துகள் கலந்திருக்கும் என்று அர்த்தமாம்.
இதுவே 9 என்ற எண்ணில் எண் ஆரம்பித்தால் அவை 100 சதவீதம் இயற்கையாக விளைந்தவை என்றும் உடம்பிற்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.