பாத்ரூம்ல கறை போகலையா? ஸ்டார் ஹோட்டல் போல பளபளக்க இதை மட்டும் பண்ணுங்க!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான குளியலறைகள் அவசியமானது.
நாள் முழுவதும் அது ஈரப்பதமாக இருந்தாலும் தினமும் தரமான கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
நகர்ப்புற சூழலில் இடப்பற்றாக்குறை காரணமாக குளியலறையும், கழிவறையும் ஒரே அறையாக அமைக்கப்படுகிறது.
நீங்கள் கழிவறையை சரி வர சுத்தம் செய்யா விட்டால் அதனால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.
நம் வீட்டில் பயன்படுத்தும் பாத்ரூம்களை நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பளபளப்பு கிடைப்பதில்லை.
இந்த சுத்தப் பராமரிப்பு ரகசியத்தை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
வாஷ் பேசன்ஸ்
நீங்கள் பல் துலக்கும் பற்பசை அழுக்கு, தலை சீவும் போது உதிரும் தலை முடி மற்றும் உணவுத் துகள்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாஷ் பேசன் சுத்தத்தையும் அழகையுமே கெடுத்து விடும்.
இதற்கு லிக்யூட் க்ளீன்சர் அல்லது பினால் கொஞ்சத்தை அதில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ்யை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
இதை திரும்ப திரும்ப செய்து வரும் போது உங்கள் வாஷ் பேசன் பளபளக்கும்.
தரை மற்றும் சுவர் டைல்ஸ்
இதை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். காரணம் எல்லா அழுக்குகளும் இங்கே தேங்கிப் போய் கிடக்கும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே எளிதாக ஒரு க்ளீன்சர் தயாரிக்கலாம்.
தயாரிக்கும் முறை
கொஞ்சம் வினிகர் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதை உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.
வினிகர் உங்களுக்கு அழுக்கை நீக்குவதோடு பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் எந்த கெமிக்கல்களும் இல்லை. எனவே எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.
ஆனால் பயன்படுத்துவதற்கு முன் கையுறை அணிந்து கொண்டு பயன்படுத்தவும்
சுத்தம் செய்வதற்கு முன் சூடான நீரால் டைல்ஸ்களை கழுவிக் கொள்ளவும்.
இந்த சூட்டால் அழுக்குகள் இளகி எளிதாக சுத்தம் செய்து விடலாம். மேலும் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை பழைய டூத் ப்ரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யவும்.
டாய்லெட் பெளல்
நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து கழுவினாலும் டாய்லெட் பெளலின் மஞ்சள் கறை போகவே போகாது.
இது பொதுவாக பீங்கானால் ஆக்கப்படுகிறது.
எனவே இந்த கறைகளை போக்க ப்ளீச் முறையை பின்பற்றலாம்.
பயன்படுத்தும் முறை 1/2 கப் உலர்ந்த ப்ளீச் பவுடர் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
கறைகள் மாயமாய் மறைந்த உடன் தண்ணீர் ஊற்றி கழுவி விடவும்.
உங்களுக்கு இயற்கை க்ளீனர் தேவைப்பட்டால் 3 கப் வினிகரை ஊற்றி டாய்லெட் ப்ரஷ் கொண்டு நன்றாக தேய்த்து கழுவவும்.
முக்கிய குறிப்பு
குளியலறைக்கு வெளிச்சம் முக்கியமானது. எனவே தரமான எல்.இ. விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
இரண்டு மின் விளக்குகள் பொருத்துவது நல்லது.
ஒற்றை அறைக்கு மத்தியிலும், மற்றொன்றை வாஷ்பேசினுக்கு மேற்புறத்திலும் பொருத்த வேண்டும்.
குளியலறையில் பயன்படுத்தும் சுவிட்ச் வகைகள் மின் அதிர்ச்சியை தடுக்கும் ஷாக் புரூஃப் அல்லது வாட்டர் புரூஃப் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.
குளியலறைக்குள் வெளிப்புற காற்று உள்ளே வருவதற்கும் வெப்பம் வெளியேறுவதற்கும் ஏற்ற வகையில் காற்றாடி பொருத்தலாம். இதன் மூலம் தரையையும் ஈரப்பதம் இல்லாமல் உலர வைக்கலாம்.