பாத்ரூம் வீட்டின் உள்ளே இருக்கக்கூடாதா? அட்டாச்சிடு பாத்ரூம் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
வாஸ்து என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும்.
நமது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு இடமும் எந்த திசையில் இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் விளக்குகிறது.
அதில் குளியல் அறையும் அடங்கும். பண்டைய காலத்தில் குளியல் அறை எப்பொழுதும் வீட்டிற்கு வெளியில் இருக்கும். இந்த திட்டத்திற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
ஏனெனில் குளியலறை என்றால் அழுக்கு அல்லது தூசி சுத்தம் செய்யும் அறை மற்றும் கழிப்பறை என்றால் நம் செரிமான பொருட்களை வெளியேற்றுவதாகும்.
எனவே அது வீட்டின் உள்ளே இருக்கக்கூடாது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மோசமான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் அந்த காலத்தில் வீட்டினுள் குளியலறை மற்றும் கழிப்பறையை இணைத்து கட்ட மாட்டார்கள்.
ஆனால் இன்றைய மார்டன் உலகில் வீட்டிற்குள் தான் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. அதிலும் பெட்ரூமுடன் குளியலறைகள் இணைத்து கட்டப்பட்டு வருகின்றன.
ஆனால் வீட்டில் இதுபோன்ற அட்டாச்டு பாத்ரூம் கட்டக்கூடாது என சொல்கிறது வாஸ்து கணிதம்.
மேலும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை ஒன்றாக இணைக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
இது தவிர, குளியலறை அல்லது கழிப்பறை சுவர்களில் வெள்ளை, இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள் அல்லது வெளிர் நீல வண்ணம் போன்ற நிறப்பூச்சுகள் சிறந்த விருப்பங்களாக இருக்கும்.
மறுபுறம், குளியலறையில் பொருத்தப்படும் டைல்ஸ் எப்போதும் லைட் கலர்களில் இருக்க வேண்டும். டைல்ஸ்களின் நிறம் வெள்ளை அல்லது வான நீலமாக இருக்க வேண்டும்.
இது குளியலறைக்கு மிகவும் புதிய தோற்றத்தைக் கொடுக்கும். கருப்பு மற்றும் சிவப்பு போன்ற இருண்ட வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உண்மையில், வாஸ்து படி ஒருவர் குளியலறையில் பயன்படுத்தப்படும் வாளியின் நிறத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நீல நிற வாளி நல்லதாக கருதப்படுகிறது.
இது வீட்டிற்கு நேர்மறையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
முக்கிய குறிப்பு
- எப்போதும் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் பரணுக்கு கீழ் ஒரு கழிப்பறையை காட்டாதீர்கள்.
- கழிப்பறை தரைதளம் மற்ற குளியலறை பகுதியில் இருந்து சிறிது உயர்வாக இருக்கும்படி கட்டுங்கள் குளியலறையின் முன்கதவு கிழக்கு அல்லது வடக்கு சுவரில் இருக்க வேண்டும்.
- ஒரு புதிய வீடு திட்டமிடும்போதோ அல்லது புதுப்பிக்கும்போதோ ஒரு கட்டிட வடிவமைப்பாளரின் உதவியை கேட்பது சிறந்த தேர்வு ஆகும்.
- அதனால் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்நிறையான ஆற்றல் இருக்கும்