ஆவி பிடித்தால் சருமம் பொலிவாகுமா?
வழமையாக சளி, காய்ச்சல் வந்தால்தான் ஆவி பிடிப்போம். இது மருத்துவ ரீதியாக செய்வது. ஆனால், உடல் நலக்குறைவுக்கு மட்டுமில்லாமல் சருமத்துக்குக்கு ஆவி பிடித்தல் என்பது மிகவும் உதவும்.
சருமத்தில் ஏற்படும் மிக முக்கிய பிரச்சினை என்னவென்றால், முகப்பருக்கள் தான். ஆவி பிடிப்பதன் மூலம் முகப்பருக்களை உருவாக்கும் பக்டீரியாக்கள் அழிந்து போய்விடும்.
image - medical news today
ஆவி பிடிக்கும் பொழுது, சருமத்தில் சேரும் அழுக்குகள் அகன்று போய்விடும். அதுமட்டுமில்லாமல் முகத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும்பொழுது சருமம் பொலிவாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும்.
கொலாஜன் செல்கள் புதுப்பிக்கப்பட்டு, இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம். வெறுமனே நீரை கொதிக்கவைத்து முகத்தில் படும்படி நுகர்வதே சருமத்தை பாதுகாக்க உதவும்.
image - pinkvilla