பலரை வியக்க வைத்த சுதந்திர தேவி சிலை சரிவு.. பிரேசிலில் நடந்த சம்பவம் வைரல்
பலத்த காற்று காரணமாக பிரேசில் நாட்டில் உள்ள 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை வேறூடன் சாய்ந்த உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தென் பிரேசிலில், 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை மாதிரி, பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் உள்ள குவாய்பா நகரில், ஹவன் சூப்பர் மார்க்கெட் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது, மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் சரிந்து விழுந்துள்ளதாக குவாய்பா மேயர் மார்செலோ மரனாட்டா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளியில், மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீடாமல் வீசிக் கொண்டிருக்கிறது. சிலை கீழே சரிந்து விழுந்ததும் அங்கிருந்த கார்கள் சாலையில் ஒரு பக்கமாக நிறுத்தப்படுகின்றனர்.
சுதந்திர தேவி சிலை மாதிரி
சுதந்திர தேவி சிலை மாதிரி சிலை ஹவன் சில்லறை விற்பனைக் கடைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த சிலை சரிந்த பின்னர், குறித்த நிறுவனம் உடனடியாக அந்தப் பகுதியை தனிமைப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டது.

அதன் பின்னர், சில மணி நேரங்களுக்கு பின்னர், கடையுள்ளவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |