த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிவிட்டு மன்சூர் அலிகான் கொடுத்த அலட்சிய விளக்கம் : கொந்தளிக்கும் திரையுலகம்
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய காணொளி தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அலட்சியமாக விளக்கமளித்துள்ளமை தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகை த்ரிஷா
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் "த்ரிஷாவுடன் லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது; குஷ்பூ, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் த்ரிஷாவை தூக்கிப்போட முடியவில்லை என ஆபாசமான முறையில் பேசியிருந்தார்.
இவர் பேசிய காணொளி த்ரிஷாவின் கவனத்திற்கு சென்றதையடுத்து த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன், நடிகை குஷ்பூ, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள பதிவில், பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன்.
நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ்
அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா, என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.
மேலும், ‘லியோ’ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு த்ரிஷாக்கிட்ட சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன்.
நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் என எல்லாருக்கும் தெரியும். த்ரிஷாக்கிட்ட தப்பா கட் பண்ணி காட்டி கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது.
உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா” என அலட்சியமாக குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |